வீடு என்றதும் எது இருக்கிறதோ இல்லையோ முதலுதவிப் பெட்டி நிச்சயம் இருக்க வேண்டும்.
வீட்டில் முதலுதவிப் பெட்டி வைத்திருப்பது அவசியம். ஏதாவது பொருட்கள் அதில் தீர்ந்து போனால் உடனடியாக வாங்கி வைக்கவும்.
குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் மேற்புறப் பெட்டியில் அதனை உபயோகிக்கத் துவங்கிய நாளை குறித்து வைத்துக் கொள்ளவும்.
மருந்து, மாத்திரைகள் குழந்தைகளின் கைகளில் படாமல் இருக்கும்படி வைக்கவும்.
கண்கள் படும் இடத்தில் தினமும் போடும் மருந்து, மாத்திரைகளை வையுங்கள். மறந்து விட்டாலும் பார்க்கும்போது ஞாபகத்திற்கு வரும்.