Publish Date: Fri, 31 Jul 2009 (17:08 IST)
Updated Date: Fri, 31 Jul 2009 (17:07 IST)
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் ஏலக்காயைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கும்.
மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
இட்லி சுடும்போது, இட்லி தட்டுகளின் கீழ் ஊற்றும் நீரில் புதினா இலைகளைப் போட்டுப் பாருங்கள். கமகம இட்லி தயார்.சாம்பார் பொடி, ரசப் பொடிகளை அரைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு அதனை டப்பாவில் போட்டு வைத்தால் மணமும், சுவையும் குன்றாது.