எல்லோருமே அவர்களது சக்திக்கு உட்பட்டுத்தான் வீட்டைக் கட்டத் துவங்குவார்கள். ஆனால் யாராக இருந்தாலும் ஒரு படி மேலே போய் வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் மிகவும் கஷ்டப்பட்டுவிடுவார்கள்.
அப்படி கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்குள் குடிபோகும் நாள் மிகவும் நல்ல நாளாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
கிரகப்பிரவேசம் செய்யும் தேதியை மிகவும் நல்ல நாளாகஇ யோகம் நிறைந்த தினமாக, அந்த வீட்டில் குடிபோக உள்ளவர்களின் ராசிக்கு பொருந்தும் தினமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போதுதான் நம்முடைய வீட்டில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மனையடி சாஸ்திரத்தில் புதுமனை புகுவதற்கு ஏற்ற நாட்கள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மனையடி சாஸ்திரத்தின் படி, நாம் புதுமனை குடிபுகும் நாளை அமைப்பது சிறந்ததாக அமையும்.