எல்லா வீட்டிலும் கையால் தைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஊக்கு போன ஆடைகளைத் தூக்கி எறிந்து விட முடியாது.
எனவே, தையல் எந்திரம் இல்லாத வீடாக இருந்தாலும், ஊசி, கருப்பு, வெள்ளை நூல், கொக்கி, பட்டன்கள் வாங்கி வைத்திருப்பது அவசரத்திற்கு உதவும்.
தையல் தொடர்பான சாமான்கள் வைக்கும் டப்பாவில் ஒரு காந்தத் துண்டை போட்டு வைக்கவும். ஊசி, ஊக்கு, போன்ற பொருட்கள் கீழே விழுந்தால் சுலபமாக எடுக்கலாம்.
நிறைய நூல் கண்டுகள் இருப்பின் அவற்றை அடுக்கி வைப்பதன் மூலம் தேவையில்லாமல் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எந்த துணியாக இருந்தாலும் முதலில் மேல் தையல் அடித்து பிறகு அணிவது நல்லது. அல்லது துணி லேசாக கிழிந்ததும் உடனடியாக தைத்துப் பயன்படுத்தவும். அப்படியே அணிவதால் கிழிசல் மேலும் அதிகமாகும்.