துணிகளின் கறையை நீக்க இதோ ஓர் எளிய வழி உள்ளது. அதாவது உப்பைத் தூள் செய்து அதனுடன் சிறிதளவு அமோனியா சேர்த்து ஒரு பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் இந்தக் கலவையைத் தொட்டு, துணியில் கறையுள்ள இடத்தில் தேய்த்து பின்பு நீர் வீட்டுத் துணியை அலசினால் கறை காணாமல் போய்விடும்.
வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும் போது ஒரு முறைக்கு இரு முறை எல்லாத் துணிகளையும் பரிசோதித்துவிட்டுப் போடுங்கள்.
எதாவது துணியின் கொக்கி திறந்திருந்தால் அதனை மாட்டிவிடுங்கள். திறந்திருந்தால் அது மற்றொரு துணியில் மாட்டி இழுக்கும் போது அந்த துணி கிழிபடலாம்.
குழந்தைகளின் பள்ளிச் சீருடைகளை, போன மாதம் துவைத்து மடித்து வைத்திருப்பீர்கள். அவற்றை இப்போது எடுத்து ஒரு முறை வெயிலில் உலர்த்தலாம். அல்லது நல்ல நீரில் அலசி காய வைத்துப் பயன்படுத்தலாம்.
இதேப்போல பள்ளிப் பை, ஷூ, வாட்டர் கேன் போன்றவற்றையும் சுத்தப்படுத்தி வைப்பது நல்லது.