சாம்பாரில் உப்பு அதிகமா...
கை தவறுதலாக சாம்பாரில் உப்பு அதிகம் போட்டுவிட்டால், இரண்டு உருளைக் கிழங்குகளை வேகவிட்டுத் துண்டு செய்து அதில் போட்டால் அதிகப்படியாக உள்ள உப்பைக் கிழங்கு கிரகித்துக் கொண்டு விடும்.
குழம்பு, ரசம் கொதித்துவிட்டதா?
குழம்பு, ரசம் போன்றவை போதிய அளவுக்குக் கொதித்து விட்டன என்பதற்கு அறிகுறி மிளகாய்ப் பொடியின் நெடி அடங்கி மேலே நுரைத்துக் கொண்டு வருவதுதான்.
எலுமிச்சம் சாறு பிழியும்போது...
எலுமிச்சம் பழத்தைச் சற்று நேரம் வெந்நீரில் போட்டு எடுத்துச் சாறு பிழிந்தால் நிறையச் சாறு வரும். பிழிவதற்கும் சுலபமாக இருக்கும்.
வெங்காயத்தின் மேல் தோலை நீக்க...
வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்று விடும்.
தின்பண்டங்கள் ருசிக்க...
சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டங்களுக்கு நிறத்துக்காக கேசரி பவுடர் சேர்க்கலாம். வெல்லம் போட்டுத் தயாரிக்கும்போது இது வேண்டியதில்லை. சேர்த்தாலும் நிறம் தராது. வெல்லத் தயாரிப்புகளுக்கு நெய் சேர்ப்பதால் அதன் ருசியும் மணமும் கூடும்.