உப்பு அதிகமாகிவிட்டதா?
சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.
ரவா லட்டு செய்யும்போது....
ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து தயாரித்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்.
எண்ணெய் காறலை போக்க...
வடை, போண்டா தயாரித்த எண்ணெய் காறலாக இருக்கும். இதை போக்க ஒரு வழி. எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும். இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.
தக்காளி சூப் தயாரிக்கும்போது...
வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் வாடாமல் இருக்க...
கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.