கழிவறையின் ஃப்ளஷில் ஃப்ளஷ் மேட் போட்டு வைத்தால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.
கழிவறையில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஓடோனில் பேக் வைக்க மறக்க வேண்டாம்.
கழிவறைக் கதவில் ஒரு டவலும், கழிவறையில் டிஸ்யூ பேப்பரும் இருக்க வேண்டியவை.
வீட்டில் எல்லோரும் குளித்த பிறகு கழிவறையின் சல்லடையில் இருக்கும் முடிகளை அகற்றிவிட்டாலே கழிவறை அசுத்தமாவது தவிர்க்கப்படும். அங்கும் ஓர் நாப்தலின் பால் போட்டு வைக்கலாம்.
கழிவறையில் சின்ன சின்ன பூச்சிகள் சேராமல் அடிக்கடி சுத்தம் செய்யவும். கழிவறை எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை தவிர்க்கவும்.