கழிவறைகளை 3 நாட்களுக்கு ஒருமுறையாவது நன்றாக தேய்த்துக் கழுவி விட வேண்டும். டாய்லெட் க்ளீனர் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யவும்.
கழிவறையை சுத்தம் செய்யும் பொழுது கைகளுக்கு உரை போட்டுக்கொள்ளவும்.
மூக்கு பகுதியை மறைக்கும் விதத்தில் முகத்தை துணி வைத்து கட்டிக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
கழிவறைகளை சுத்தம் செய்ய ஆசிட் பயன்படுத்துவது தவறான விஷயமாகும். ஆசிடை பயன்படுத்தும் போது திடீரென அதன் நெடி மூக்கில் சென்றுவிட்டால் பயங்கரமான பாதிப்பு ஏற்படும்.
மேலும், அசிட் ஊற்றிய கழிவறையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
கழிவறைகளை எப்போதும் ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.