கீரை சமைக்கும்போது..
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுவது தான் அரோக்கியத்திற்கு நல்லது. இதன் மூலம் உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
கூட்டில் உப்பு அதிகமா?
சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.
தட்டை ருசியாக இருக்க...
தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.
குடை மிளகாயை சமைக்கும்போது...
குடை மிளகாயை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதனை முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாக இருக்கும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்.
வட இந்திய உணவு சமைக்கும்போது...
நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது அரை ஸ்பூன் அல்லது ஒரு சிட்டிகை சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.