வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் இரும்புச் சாமான்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பலருக்கும் தெரியாது.
அதனால் அதனைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதும் உண்டு. துருப்பிடித்த பிறகு தூக்கி எறிவதும் உண்டு.
எனவே, வீட்டில் இருக்கும் இரும்புச் சாமான்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
இரும்புச் சாமான்களை உலர்வானப் பகுதியில் வையுங்கள். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாக வைக்க வேண்டாம்.
சாமானைப் பயன்படுத்தியதும் ஒன்று வெறும் காய்ந்த டவலால் சுத்தப்படுத்தி வைத்து விடுங்கள். அல்லது கழுவினாலும், உடனடியாக உலர்ந்த துணியைக் கொண்டு துடைத்து உலர்த்தி வைத்தால் நல்லது.
ஒரு வேளை துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் எண்ணெய் நனைத்த துணியைக் கொண்டு நன்கு துடைத்து வைப்பது நல்லது.