Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இட்லி மாவு புளிக்காமல் இருக்க

இட்லி மாவு புளிக்காமல் இருக்க
, வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (18:32 IST)
சிக்கன் 65 சமைக்கும் போது கோழி‌க் கறி மிருதுவாக இருக்க (1/2 கிலோவிற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில்) முட்டையைச் சேர்க்கவும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறிய துண்டு வாழை இலையை அதில் வைக்கவும்.

ொ‌ரியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்தால் அது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.

வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்ற முடியாது. நெயில் பாலிஷ் ரிமூவரை இதன் மேல் தடவி, சுத்தமான துணியால் துடைக்கவும். சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளக்கும்.

பாத்திரத்தை மூடி வைத்து காய்கறிகளை சமைத்தால், சமையலும் சீக்கிரம் முடியும், அதில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படும்.

அலமாரிகளில் சூடத்தை வைத்து, பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும் போட்டு வைக்கலாம்.

ஃபிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும் போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் மிருதுவாக இருக்கும்.

வறுத்த வேர்கடலையை பொடியாக்கி காய்கறிகள் சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும்.

சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் பட்ட கோந்து கரைகள் நீங்கும்.

சர்க்கரை வியாதியில் அவதிப்படுபவர்கள் தங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க வெந்தயப் பொடியை தினமும் சாப்பிடுவது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil