Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்கள்

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்கள்

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்கள்
நாம் சமையல் செய்யும்போது பொருட்கள் வீணாகமலும், சுவையாகவும், எளிதாகவும் இருக்க சில வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.


 
 
1. பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.
 
2. பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால் கெட்டியான சூப் கிடைக்கும்.
 
3. உளுந்து வடை மாவு ரொம்ப நீர்த்துப்போய் விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும்.
 
4. கலந்த சாதம், வெஜிடபிள், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறைவிட்டுக் கிளறிவிட வேண்டும்.
 
5. பன்னீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பன்னீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்.
 
6. வாழைத்தண்டை நறுக்கிக் கொண்டிருக்கும்போது ஆள்காட்டி விரலில் நாரைச் சுற்றிக் கொண்டேயிருந்தால் மோதிரம் போல நார் திரண்டு வந்துவிடும்.
 
7. ஆலு பரோட்டா செய்யும்போது பூரணம் வெளிவராமல் இருக்க மாவை கிண்ணம்போல் வடிவமைத்து ஆலுவை உள்ளே வைத்து மாவை நன்றாகச் சுற்றி மூடி செய்தால் பூரணம் வெளியே வராது.
 
8. பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும். இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால் பொடி ருசியாக இருக்கும்.
 
9. பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம் மூன்று பூண்டுப் பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் வாசனையுடன் கூடிய சுவையான பஜ்ஜி கிடைக்கும்.
 
10. தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil