பட்டுச்சேலையை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்
பட்டுச்சேலையை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்
விலை அதிகமானாலும் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதிகம் விலை கொடுத்து வாங்கி அழகாக உடுத்தி அழகு பார்க்கும் நமக்கு அதை பாதுகாப்பாக பராமரிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா!
விசேஷங்களுக்கு கட்டி சென்று வந்தவுடன் பட்டுச்சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது. அது சரியானது அல்ல.
காற்றோட்டமான நிழலில் இரண்டு மற்றும் மூன்று மணி நேரம் உலர விட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு கைகளால் தேய்த்து அழுத்தி மடித்து வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பட்டுசேலையை சூரிய ஓளி படும் இடத்தில் வைக்ககூடாது. சோப்போ அல்லது சோப்பு பவுடரோ உபயோகித்து துவைக்க கூடாது. வெறும் தண்ணீரில் பட்டுச்சேலையை அலசினால் போதுமானது.
பட்டுச்சேலையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் சோப்பு பவுடர் உபயோகப்படுத்தாமல் எப்படி பராமரிப்பது என்று கேட்குறீங்களா! அதுக்கும் இருக்குது வழிகள். ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலசவேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி பத்து நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் அலச வேண்டும். பட்டு புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைத்திருக்கவும் கூடாது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். அயர்ன் செய்யும் போது ஜரிகையை திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது. பட்டுச்சேலையை கடையில் இருந்து வாங்கி வந்தபடி அட்டை பெட்டியில் வைக்காமல் துணிபையில் வைக்கலாம்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்