Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டுத் தோட்டம் பராமரிப்பும் இயற்கை உரம் தயாரிப்பும் பற்றி பார்ப்போம்....!!

வீட்டுத் தோட்டம் பராமரிப்பும் இயற்கை உரம் தயாரிப்பும் பற்றி பார்ப்போம்....!!
வெயில் காலங்களில் தினமும், குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தேவை அறிந்து தண்ணீர் விட்டால் போதுமானது.
தண்ணிர் என்பது தாவரம் உயிர் வாழ போதுமானது. ஆனால் அதிக மகசூல் வேண்டுமெனில் அதற்கு தேவையான உயிர் சத்து மிக்க இயற்கை  உரங்களை பயன் படுத்த வேண்டும்.
 
சாண எரு, ஆட்டு கழிவு, முட்டை ஓடு, மீன் தொட்டி நீர், வெங்காயம், பூண்டு  இவற்றின் தோல்கள் என அனைத்தையும் உங்கள்  தோட்டங்களில் பயன் படுத்தலாம்.
 
இலைகளில் தோன்றும் பூச்சி, புழுக்கலுக்கு மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம். வேர்பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைகளை பயன்படுத்துவதன் மூலம் செடிகளை பாதுகாக்க முடியும்.
 
வாரம் ஒரு முறை மண்ணை கிளறி விட வேண்டும். காபி தூள், டீ தூள் மற்றும் மற்ற கழிவுகளை செடிகளுக்கு உரமாக இடலாம். இதன்  மூலம் செடிகள் நன்கு வளரும். 
 
உங்கள் வீட்டு சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி தோட்டங்களில் பயன்படுத்தலாம். முதலில் இரண்டு குப்பைத் தொட்டிகளை தயார் செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தொட்டியில் கொட்டவேண்டும். அவற்றை மக்கவைத்து உரமாகப் பயன்படுத்தலாம்.
 
மீன் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் வெல்லம் சேர்த்து வைக்கும்போது நாற்றமே இல்லாத உரமாக மாறிவிடும். அதே போன்று மீன்  தொட்டிகளில் உள்ள நீரை மாற்றும்போது அந்த கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். அதே போன்று அரிசி, பருப்பு, சிறு தானியங்கள்  களைந்த நீரை தாவரங்களுக்கு செலுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம்!!