சமைக்கும் பெண்கள் தங்கள் வேலைகளை வளர்த்துகொண்டே போவார்கள். இதனால் நேரம் அதிகமாவதுடன் சரியான நேரத்திற்கு உணவு தயாரிக்க தாமதமாகும்.
அவர்களுக்கான டிப்ஸ்
1. சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துவிட்டால் எளிதில் தோல் நீக்கி விடலாம்.
2. கால்மிதிகளை துவைக்க சிரமப்படும் பெண்களுக்கு, அவற்றை சுடுநீரில் சிறிது துணிசோடாவை போட்டு பிறகு ஊறவைத்து துவைத்தால், அழுக்கு எளிதில் வந்துவிடும்.
3. தங்க நகைகளை கழுவ, நல்ல சுத்தமான தண்ணீரில் சிறிது துணிசோடாவைப் சேர்த்து கலக்கி பின் நகைகளை போட்ட இரண்டு நிமிடத்திலேயே எடுத்துவிடவேண்டும். நகைகள் புதிது போல் ஜொலிக்கும்.
4. வறட்டு இருமல் இருந்தால் கொஞ்சம் தேனை எடுத்து, இஞ்சிச்சாறு அல்லது எலுமிச்சைச்சாறு கலந்து குடித்தால், அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போகும்.
5. புடவைகளுக்கு ஸ்டார்ச் போட வீட்டில் சாதம் வடிக்கும் தண்ணீரை வடிகட்டி நனைத்து காயவைத்து, நன்கு நீவி மடிக்க வேண்டும். அப்போதுதான் அயன் செய்வதற்கு எளிதாக இருக்கும்.
6. மென்மையான சப்பாத்தி வரவேண்டுமென்றால் தண்ணீருக்கு பதில் வெந்நீர் அல்லது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.
7. துணிகளில் உள்ள கறைகளை போக்க சிறிது வினிகர் விட்டு கசக்கினால், கறை எளிதில் போய்விடும்.
8. பூர் செய்யும்போது நன்கு உப்பிவர மாவுடன் சிறிது ஆப்பசோடா மற்றும் பால் சேர்த்து பிசையலாம்.
9. குளிர்சாதன பெட்டியில் ஏற்படும் பனி உருவாவதை தடுக்க, உப்பை தடவி தடவி வைத்தால் பனி உருவாவது தடுக்கப் படும்.
10. காளான்களை க்ளிர்சாதப் பெட்டியில் வைக்கும்போது, காகித பைகளை உபயோகிக்கவும்.