Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேகவைத்த முட்டை ஓட்டை உடைப்பது எப்படி ? நெட்டிசனின் புது ஐடியா .. வைரல் வீடியோ

Advertiesment
வேகவைத்த முட்டை ஓட்டை உடைப்பது எப்படி ? நெட்டிசனின் புது ஐடியா .. வைரல் வீடியோ
, புதன், 8 ஜனவரி 2020 (17:38 IST)
எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருப்பது முட்டை. அந்த முட்டையை ஆம்லைட் போட்டும் பொடிமாஸு செய்தும், கலக்கியாக செய்தும் சாப்பிடலாம். ஆனால் அந்த முட்டையை வேகவைத்த பின் அதன் முட்டை ஓட்டை உறிப்பதற்குத்தான் நமக்குப் பொறுமை போதாது. நிச்சயம் ஒரு முட்டையில் பாதி வெள்ளைச் சதைகளை நம் விரல் நகமே கொறித்துவிடும்.
இந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முட்டையை உடைப்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரல் ஆகி வருகிறது.
 
அந்த வீடியோவில், ஒரு கண்ணாடி கிளாசில் தண்ணீர் பிடித்து அதில், அவித்த முட்டையைப் போட்டு லேசாக குலுக்கிய போது, தண்ணீருடம் அந்த முட்டை உடைபட்டு, ஓடு மட்டும்  தனியாக உடைந்து வருகிறது. முட்டைக்கு சேதாரம் இல்லாமல் அழகாக உள்ளது. 
 
இந்த வீடியோ 3மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில உணவுகளின் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் குறிப்புகள்...!!