வீட்டித் தோட்டத்தின் பெரும்பகுதியை அல்லது வீட்டின் முன்புறமுள்ள விளையாடும் பகுதியை புற்களால் நிரப்பி வைக்கலாம். இது மண் அரிப்பையும், வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.
ஆனால் புற்கள் என்பவை, அதிகமான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. மேலும், வேகமாக வளரும். எனவே, அதிகமான நீரை ஊற்ற முடியும், அவ்வப்போது வெட்டி விட முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே சாதாரண புற்களை வளர்க்கலாம். இவை சற்று நாள் நீர் இல்லாமல் இருந்தாலோ, அதிகமான வெயில் தாக்கினாலோ கருகிவிடும்.
அருகம்புல் வகையைச் சேர்ந்த புற்களை வளர்ப்பதால் அதிக நீர் ஊற்றத் தேவையில்லை. இவற்றின் வளர்ச்சி மெதுவாகவே நடைபெறுவதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமும் இல்லை.
இதில் பூச்சிகளும் அண்டாது. பார்க்கவும் அழகாக இருக்கும். இவை ஒரு வேளை கோடைக்காலத்தில் வாடிப்போனாலும், மீண்டும் நீர் ஊற்றினால் பச்சை பசேலென முளைத்துவிடும்.
இவை படரும் தன்மை கொண்டிருப்பதால் வளர்ப்பதும் எளிது, வறட்சி காலத்திலும் நீண்ட நாட்களுக்கு வாழும் தன்மை கொண்டது.