எறும்புகளை விரட்ட...
வினிகர் மற்றும் தண்ணீரைக் கலந்து எறும்பு இருக்கும் இடங்களில் தெளிக்கவும்.
கிராம்பை பொடியாக்கி நுழையும் இடங்களில் தூவலாம்.
சிவப்பு மிளகாய்த்தூள் தூவுவதால் எறும்பு வருவதை தடுக்கலாம்.
எலுமிச்சை சாறும், எலுமிச்சை தோலும் எறும்புகளை விரட்ட உதவும்.
ஈக்களை விரட்ட...
துளசி செடி, ஈக்களை விரட்டும்.
ஆரஞ்சு தோலை மூலைகளில் வைப்பதாலும் ஈக்களை விரட்டலாம்.
கிராம்புகளை ஜன்னல், கதவு ஆகியவற்றின் அருகில் வைக்கலாம்.
சர்க்கரையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு அட்டையை நனைத்து தூரத்தில் தொங்க விடலாம். இதில் ஈக்கள் போய் ஒட்டிக் கொள்ளும்.
கரப்பான் பூச்சியை விரட்ட...
சோடா மாவையும், பொடித்த சர்க்கரையையும் சேர்த்து தூவலாம்.
நறுக்கிய பிரியாணி இலை, வெள்ளரி தோல் ஆகியவையும் கரப்பானை விரட்டும்.
பல்லிகளை விரட்ட...
புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அறையின் மூலைகளில் வைக்கலாம்.