Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் எலி தொல்லையா...?

வீட்டில் எலி தொல்லையா...?
, வெள்ளி, 1 மார்ச் 2013 (18:01 IST)
FILE
வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு.

எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சனையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

குப்பைகளை கொட்டியப்பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும்.

தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.

இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.

இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசக‌ற்பூர‌ம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தா‌ல் எலிகள் அப்பக்கமே வராது.

Share this Story:

Follow Webdunia tamil