பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.
முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிவப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
ஏலக்காயை தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும். தேநீரும் மணக்கும்.
பழம், ஃப்ரூட் சாலட், சாறுகள் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
தேநீர் தயாரிக்கும் போது ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளி எளிதில் கரையும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
உருளைக்கிழங்குகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது. ஏனென்றால், உருளைக்கிழங்குகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.
வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும்.
நெய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.
சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.
தேங்காயைத் துருவி தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் தயிர் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
கூடையில் பச்சை காய்கறிகளைப் போட்டு ஈரத்துணியால் மூடிவைத்தால் மூன்று நாள் வரை வாடாமல் இருக்கும்.
கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.