திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம்.
முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் வெளிச்சமான வண்ண விளக்குகளைப் பொருத்தலாம்.
சின்ன சின்ன பூந்தொட்டிகளில் செடிகளை வைப்பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத்தை பூசுவதன் மூலமும் குளியலறையை அழகு படுத்தலாம்.
இதே போன்று குளியலறை மிதியடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண்டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத்தைக் கொண்டு வரலாம்.