பொதுவாக குக்கர் என்பது நமது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சம் பிடிக்க வந்த ஒரு பாத்திரம் என்று கூற வேண்டும். குக்கரை சரியாகப் பயன்படுத்தினால் நல்ல ருசியான சமையலையும், சிக்கனமான குடும்பத் தலைவி என்ற பெயரையும் எடுக்கலாம்.
சில சமயம் சமைக்கும் போது வெயிட் வால்வு வழியாக அதிக அளவு கஞ்சி வெளியேறும். இது ஏன் என்று பலருக்கும் தெரிவதில்லை. சமையலுக்கு தேவையானதை விட தண்ணீரின் அளவு அதிகமாகி விட்டால், அதிகமான நீரை இந்த வெயில் வால்வு வெளியேற்றுகிறது.
மேலும், குக்கருக்குள் ஒரு பாத்திரம் வைத்து சமைக்கும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் சில நேரங்களில் உள்பாத்திரம் இல்லாமல் நேரடியாக சமையல் செய்யும் போதும் இப்படி நீர் வெளியேறும்.
நெருப்பின் அளவு மிக அதிகமாக இருந்தாலும், குக்கருக்குள் இருக்கும் நீர் வெளியேறும்.