கார்பெட் கறைகளை நீக்க:
கார்பெட்டில் ஏதாவது கொட்டிவிட்டால், உடனடியாக அதன்மேல் உப்பைத் தூவுங்கள். உப்பு ஈரத்தை உரிஞ்சிவிடும். கறையும் கார்பெட்டை விட்டு நீங்கும். காய்ந்த கறைகளை நீக்க டிட்டர்ஜென்ட் பயன்படுத்தலாம்.
கண்ணாடிப் பாத்திரங்கள் பளிச்சிட:
கண்ணாடி பாத்திரங்களை ௧ மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊரவையுங்கள். அதன்பிறகு நைலான் அல்லது பிளாஸ்டிக் தேய்ப்பானால் நன்றாக தேய்த்து கழுவுங்கள். பாத்திரங்கள் பளிச்சிடும்.
இன்னும் கறைகள் இருந்தால், அவை தேய்த்ததால் ஏற்பட்ட கறையாக இருக்கக்கூடும். கண்ணாடி பாத்திரங்களை கைகளால் கழுவது சிரந்தது.
பெய்ண்ட் கறைகளை நீக்க:
கறை பட்டவுடன் தண்ணீரால் கறையை கழுவுங்கள். பிறகு டிட்டர்ஜென்ட்டால் கழுவுங்கள். கறை காய்ந்துவிட்டால் அதை நீக்க முடியாது என்பதை நினைவில் வையுங்கள்.
அல்லது ஒரு வெள்ளை துணியை கறையின் மேல் வைத்து சிறிதளவு டர்பென்டைன் துணியின் பின்பக்கத்தில் தடவி தேய்த்தால் கறை நீங்கும்.
புல் கறைகளை நீக்க:
க்ளிஸரின் மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து அதில் கறைப்பட்ட துணியை ஊரவைக்கவும். அதன் பிறகு டிட்டர்ஜென்ட்டால் துவைக்கவும். கறை நீங்கவில்லை என்றால் துணியை உலர வைக்காதீர்கள், அது கறையை நீக்க முடியாமல் செய்துவிடும். அதனால் மீண்டும் ஒரு முறை மேலே கூறியதைப் போல் ஊரவைத்து துவைக்கலாம்.