Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகான குளியலறையின் ரகசியம்!

அழகான குளியலறையின் ரகசியம்!
, வியாழன், 12 ஏப்ரல் 2012 (16:04 IST)
FILE
“என் வீட்டில் பாத்ரூமே இல்லை. கிளாமர் ரூம்ஸ் தான் உண்டு” என்று விளம்பரத்தில் ஒரு மாடல் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். குளியலறையும் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை தற்பொழுது அனைவரிடையே உள்ளது என்பதற்குச் சான்று. ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியலறை இருந்தது இப்பொழுது படுக்கையறையோடு சேர்ந்த “அட்டாச்ட் பாத்ரூம்” என்றாகிவிட்டது.

குளியலறை அமைப்பு

வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று குளியலறையின் அமைப்பும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு குளியலறையிலும் பெரியவர், சிறியவர் ஆகியோர்க்கு ஏற்ற முறையில் அமைப்பது அவசியமாகிறது. அது மட்டுமின்றி வீட்டில் வெவ்வேறு விதமான ரசனை உள்ளவர்களை மனதில் கொண்டு குளியலறை அமைப்பது அவசியமாகும். இதில் இடம், பரப்பு, வசதிகள் மற்றும் அழகுபடுத்துதல் ஆகிய அனைத்தும் இடம் பெறுகின்றன.

குளியலறையில் பாத்டப் திரை, டைல்ஸ், குழாய், ஷவர், கேபினட், கண்ணாடி போன்றவற்றின் தேவை அவசியமாகிறது. அது மட்டுமின்றி குளியலறை நிறமும் முக்கியமான ஒன்று. கவர்ச்சியான நிறத்தின் மூலம் தான் குளியலறை அழகாகக் காட்சியளிக்க முடியும்.

முன்பே இருக்கும் குளியலறைகளை இடித்து உடைத்து புதிதாகக் கட்டுவதை விட எளிமையான முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்வதன் மூலம் இவை மேலும் அழகாகக் காட்சியளிக்கக் கூடும்.

திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம். முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் பூந்தொட்டிகளில் செடிகளை வைப்பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத்தை பூசுவதன் மூலமும் குளியலறையை அழகு படுத்தலாம்.

இதே போன்று குளியலறை மிதியடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண்டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

குளியலறையில் இடத்தை எப்படி பயன்படுத்துவது ?

சில மாற்றங்கள் செய்தால் கூடுதலான இடம் கிடைக்கும். திறப்பாக உள்ள ஷெல்ஃப்களை நல்ல வர்ணம் கொண்டு பூசுவது நல்லது சுவற்றில் கண்ணாடி பொருத்துவதால் அதிக இடம் இருப்பது போல் தோன்றும்.

குளியலறை பற்றி சில அவசியக் குறிப்புகள்!

குளியலறைக்காக அதிகம் செலவழித்து அழகுபடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. சுவரில் கண்ணாடி ஷெல்ஃப் வைத்து அதில் அழகான பூந்தொட்டிகள் வைக்கலாம். சுவரில் இயற்கைக் காட்சி ஓவியங்களை வைக்கலாம். குளியலறையின் நீலளமான சன்னல்களில் திரைகளைத் தொங்க விடவும்.

ஒரு அழகான குளியலறையில் நாள் துவங்கினால் நாள் முழுவதும் மனதில் புத்துணர்ச்சி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Share this Story:

Follow Webdunia tamil