Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சில இல‌க்‌கிய தகவ‌ல்க‌ள்

Advertiesment
‌சில இல‌க்‌கிய தகவ‌ல்க‌ள்
, திங்கள், 12 ஏப்ரல் 2010 (17:03 IST)
குழ‌ந்தைகளா இது பொது அ‌றி‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌‌ள்வத‌ற்கான நேர‌ம். இ‌ன்று இல‌‌க்‌கிய‌த் தகவ‌ல்க‌ள் ‌சிலவ‌ற்றை உ‌ங்களு‌க்காக தொகு‌த்து‌ள்ளோ‌ம்.

* இரவீந்தரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913-ம் ஆண்டு பெற்றார்.

* திருக்குறள் முதன்முதலில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.

* நோபல் பரிசு ஆல்பிரெட் நோபல் என்பவரின் நினைவாக 1901-ம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

* இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் நபர் சுல்லி புருடோம்மே.

* பிரபல அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெம்மிங்வே ஆங்கில இலக்கியத்துக்காக 1954-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

* புனைப் பெயர் சூட்டும் பழக்கம் தோன்றிய முதல் நாடு சீனா.

* இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் நாடு ஃபிரான்ஸ் ஆகும்.

* ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.

* தமிழில் வெளியான முதல் செய்தித் தாள் சுதேசமித்திரன்

* முதன்முதலில் அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1450. கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க்.

* முதன்முதலில் இங்கிலாந்தில் வெளியான செய்தித்தாள் "கோரண்டோ' என்பதாகும். ஆண்டு 1621.

* முதன்முதலில் இந்தியாவில் வெளியான செய்தித்தாள் "வங்காள கெஜட்' ஆண்டு 1780.

* தமிழகத்தில் வெளியான முதல் ஆங்கில செய்தித்தாள் "மெட்ராஸ் கூரியர்'. வெளியான ஆண்டு 1785.

* முதன்முதலில் மும்பையில் வெளியான செய்தித்தாள் "பம்பாய் ஹெரால்டு'. ஆண்டு கி.பி.1789.

* பெரிய புராணத்திற்கு சேக்கிழார் சூட்டிய பெயர் திருத்தொண்டர் புராணம்.

Share this Story:

Follow Webdunia tamil