Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.153 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்

Advertiesment
ரூ.153 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்
, வியாழன், 26 மார்ச் 2009 (11:40 IST)
செ‌ல்லாதவை என தர‌ம்‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ரூ.153 கோடி ரூபா‌ய் நோ‌ட்டுக‌ள் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன.

ஓரளவுக்கு மேல் கிழிந்த அல்லது கரைபடிந்த ரூபாய் தாள்களை செல்லாத நோட்டுகளாக வங்கிகள் அறிவித்து விடுகின்றன. அவற்றை சேர்த்து வைத்து குறிப்பிட்ட நாளில் ஒட்டு மொத்தமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் மற்ற வங்கிகள் அளிக்கின்றன. இந்த நோட்டுகளின் எண்களை ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொண்டு, செல்லாத நோட்டுகளை அழித்துவிடுகிறது. பின்னர் அந்த எண்களுக்கு புதிய ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிறது.

இந்த வகையில் சேலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செல்லாத ரூபாய் தாள்களை சேர்த்து வைத்திருந்தன. ஆயிரம் ரூபாய் தாளில் தொடங்கி ஒரு ரூபாய் தாள் வரை இவை அடங்கும். செல்லாத ரூபாய் தாள்கள் மொத்தம் ரூ.153 கோடி சேர்ந்திருந்தது. இவற்றை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

அவ‌ற்றை பெ‌ட்டிக‌ளி‌ல் க‌ட்டி ‌சீ‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு சேல‌ம் ‌விரைவு ர‌யி‌லி‌ல் ஏ‌ற்ற‌ப்ப‌ட்டு, நே‌ற்று காலை செ‌ன்னை வ‌ந்தது.

அதைத்தொடர்ந்து பண பெட்டிகள் சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் பணப்பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.

இ‌ந்த பண நோ‌ட்டு‌க்க‌ளி‌ன் எ‌ண்க‌ள் கு‌றி‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு, அவ‌ற்‌‌றி‌ற்கு ப‌திலாக பு‌திய நோ‌ட்டுகளை ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி அ‌ச்ச‌டி‌க்கு‌ம். இ‌ந்த பழைய நோ‌ட்டுக‌ள் இ‌ய‌ந்‌திர‌ம் மூல‌ம் கூழாக அரை‌த்து அ‌ட்டைக‌ள் செ‌ய்ய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி கொடு‌த்து‌விடு‌ம்.

சு‌ற்று‌ச்சூழ‌ல் மாசுபடுவதை‌த் த‌வி‌ர்‌க்க, ரூபா‌ய் நோ‌ட்டு‌க்களை எ‌ரி‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌க் குறை‌த்த‌க் கொ‌‌ண்டு‌ள்ளது எ‌ன்று வ‌ங்‌கி அ‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil