சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் அருகே மக்காட் வனப்பகுதியில் உள்ள 4 தேக்கு மரங்களுக்கு இராமாயாணத்தில் வரும் ராமர், லட்சுமணன், பரதன், சத்ருகனன் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதிக்கு மக்கள் அதிகம் வந்து, இராமாயாண கதாபாத்திரங்களை பார்த்துச் செல்கிறார்கள்.
தவிர சட்டீஸ்கர் மாநில மக்களுக்கு மரங்களின் மீதான அன்பும் இதன்மூலம் வெளிப்படுகிறது.
பாரத் எனப்பெயரிடப்பட்ட நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான மரம் ஒன்று அழிந்து விட்டதையடுத்து, மக்கள் மிகவும் வேதனையடைந்தனர். அந்த மரம் எதனால் அழிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
என்றாலும் அந்த மரம் வயதானதாலேயே அழிந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே 6 அடி விட்டம் கொண்ட மற்றொரு மரத்திற்கு ராமர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அந்த மரத்திற்கு அருகிலேயே லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகிய மரங்களும் உள்ளன. பாரத் மரங்களைப் போன்று இந்த மரங்கள் அழிவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரங்கள் அனைத்தும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தேக்கு மரங்களும் மனிதர்களைப் போன்றே வளர்ந்து வந்துள்ளதாகவும், வயதான உடன் அவை மரணத்தை எதிர்கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே இதிகாசத்தில் வரும் ராமர், லட்சுமணன் உள்ளிட்டோரை தேக்குமர வடிவில் பார்க்க வேண்டுமா? சட்டீஸ்கர் வனத்திற்குச் செல்லுங்கள்.