ஒரு சில வார்த்தைகள் இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கும். பயன்படுத்தும் இடத்திற்கேற்ப அதன் பொருள் அமையும்.
திங்கள்: மாதம், நிலவு, கிழமை.
ஆறு: நதி, எண்ணின் பெயர்.
இசை: சம்மதித்தல், சங்கீதம்.
மாலை: பூமாலை, பொழுது.
நகை: புன்சிரிப்பு, அணிகலன்.
மதி: அறிவு, நிலவு, மதித்தல்.
வேழம்: யானை, மூங்கில், கரும்பு.
மெய்: உண்மை, உடம்பு.
உடுக்கை: ஆடை, இசைக்கருவி.
அன்னம்: சோறு, பறவை.
நாண்: கயிறு, வெட்கப்படுதல்.
வேங்கை: புலி, ஒரு வகை மரம்.
ஞாயிறு : கிழமை, சூரியன்