நாம் சில முக்கிய அமைப்புகளைப் பற்றி அதிகம் கேட்டிருப்போம். ஆனால் அவை குறிப்பாக எங்கு உள்ளன என்று அறியாமல் இருக்கலாம். அந்த வகையில், சில முக்கியமான அமைப்புகள் எங்கு உள்ளன என்பதை இங்கு சிறிய அளவில் தொகுத்துள்ளோம்.
மகாபலேஸ்வரர் கோயில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரில் உள்ளது.
சுந்தரவனக் காடுகள் மேற்குவங்கத்தில் உள்ளன.
சூரியக் கோயில் கோனார்க்கில் அமைந்துள்ளது.
ஜோக் (ஜெரசப்பா) நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.
பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடம் எண்.10, டவுனிங் தெரு.
நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
சிவபுரி தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசத்தில் உள்ளது.
இந்திய அணுசக்திக் கழகம் மும்பையில் அமைந்துள்ளது.
உலகிலேய மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஸ்வீடன் நாட்டில் உள்ளது.
சார்க் அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.