பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்யும் வகையில் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்கிறது எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை.
இது குறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் சாரதா சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, குழந்தைகள் தினமான நவம்பர் 14ஆம் தேதி பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இத்திட்டத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, சைலன்ட் மெலோடி சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் உதவியோடு பச்சிளம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கண்டறியும் சிகிச்சை அளிக்கப்படும்.
குறை பிரசவமான குழந்தைகள், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. ராதாத்ரி நேத்ராலயாவைச் சேர்ந்த மருத்துவர்கள் வாரம் ஒரு நாள் எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சையை இலவசமாக அளிப்பார்கள்.
புற்றுநோய் உள்ளதா, மூளை வளர்ச்சி நன்றாக உள்ளதா போன்ற பரிசோதனைகள், தனியார் டாக்டர்கள் மூலம் இலவசமாக செய்யப்படும்.
நவம்பர் 15ஆம் தேதி குழந்தைகள் மருத்துவமனை தொடங்கி 50 ஆண்டுகளாகின்றது என்று சாரதா சுரேஷ் கூறியுள்ளார்.