குழந்தைகளா உலகில் நீங்கள் அறிந்து கொள்ள எத்தனையோ முக்கிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே.
உலகில் பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் மேற்கொண்ட கப்பல் -சாலஞ்சர் (1872-1876)
உலகிலேயே மிகப்பெரிய பனியாறு உள்ள இடம் -யாகூட் வளைகுடா (அலாஸ்கா)
உலகின் முதன்முதலில் நில நடுக்கம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் -சீனர்கள்.
உலகிலேயே மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது - மோனலோவா (ஹவாய்).
உலகிலேயே மிகப்பெரிய எரிமலை பிரதேசம் - தக்காண பீடபூமி.
உலக வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் - மார்கீஸ் (சுவிட்சர்லாந்து)
உலகிலேயே எரிமலை வெப்ப சக்தியை வீட்டு அறை வெப்பத்திற்காக பயன்படுத்தும் ஒரே இடம் - ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து)
உலகின் முதல் பல்கலைக்கழகம் - தட்சசீலம் (கி.மு.700)
ஓசோன் பாதுகாப்பிற்காக விண்ணில் ராக்கெட் ஏவிய நாடு -அமெரிக்கா (நாசா 1991).
முதன்முதலில் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாடு - ரஷ்யா (லூனா3 -1959)
உலகில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படும் நாடு அமெரிக்கா.
உலகில் அதிக அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடு இந்தியா.
உலகில் ரயில் போக்குவரத்தே இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்.
உலகிலேயே அதிக அளவில் மீன்பிடிக்கும் நாடு ஜப்பான்.
உலகின் மிகப்பெரிய சட்டசபை உள்ள நாடு சீனா.
உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.
உலகின் கூரை என்று அழைக்கப்படும் நாடு பாமீர்.
உலகிலேயே வைரம் அதிகமாக கிடைக்கும் நாடு ஆப்பிரிக்கா
உலகிலேயே பட்டு அதிகமாக ஏற்றுமதியாகும் நாடு சீனா.