Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நா‌ட்டை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்

தமிழ்நா‌ட்டை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்
, வெள்ளி, 30 அக்டோபர் 2009 (12:58 IST)
த‌மிழக‌த்‌தி‌ன் தலைநக‌ர் செ‌ன்னை எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி ஒரு ‌சில பு‌ள்‌ளி ‌விவர‌ங்களை உ‌ங்களு‌க்கு இ‌ங்கே அ‌ளி‌க்‌கிறோ‌ம்.

மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகு‌ம்.

WD
மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு , திருப்பூர், தூத்துக்குடி, மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

தமிழ்நாட்டைப் பற்றிய புள்ளிவிவரம்

தலைநகர் - சென்னை
பரப்பளவு -11,30,058 ச.கி.மீ.
மக்கள் தொகை- 62,405,679 (2001 கணக்கீடு)
ஆ‌ண்க‌ள் - 31,400,909
பெ‌ண்க‌ள் - 31,004,770
மொத்த மாவட்டங்கள் - 32
மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 234
மொத்த மாநகராட்சிகள் - 8
மொத்த நகராட்சிகள் - 102
மொத்த நகர பஞ்சாயத்துகள் - 611
மொத்த கிராம பஞ்சாயத்து ஒன்றியங்கள் - 385
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌கிராம‌ங்க‌ள் - 16,317
மொத்த ரயில் நிலையங்கள் - 670
ரயில்பாதையின் நீளம் - 4,18,088 கி.மீ.
சாலைகளின் நீளம் - 1,72,258 கி.மீ.
கடற்கரையின் நீளம் - 912 கி.மீ.
அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்.
தமிழக மலர் - செங்காந்தழ்.
தமிழக விலங்கு - வரையாடு.

Share this Story:

Follow Webdunia tamil