சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதியைத்தான் நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையைத் துவக்கிய ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவருமாகவும், இரண்டாவது குடியரசுத் தலைவருமாகவும் உயர்ந்தவர்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இவர் ஒரு ஆசிரியராகவே தனது வாழ்க்கையைத் துவக்கினார். தனது பணிக் காலத்தில் சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதியை, ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளா உங்கள் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா?
இந்த தினத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், உங்களது ஆசிரியர்களுக்கும் உங்களது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்.