Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுக்கு‌த் தெரியுமா?

Advertiesment
உங்களுக்கு‌த் தெரியுமா?
, செவ்வாய், 13 மார்ச் 2012 (15:35 IST)
* ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நோவா (novae) நட்சத்திரங்களின் ஒளி மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றுபவை. இந்த நட்சத்திரம் பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டு பார்த்தாலும் பார்ப்பதற்கு தெரியாமல் போகலாம், ஆனால் இதன் ஒளி மனித கண்களுக்கு‌த் தெரியும் அளவுக்கு பிரகாசித்து மறையும்.

* மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

* ஹவாய் நாட்டின் மொலொகாய் என்ற வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய கடல் பாறை அமைந்துள்ளது. அது 1005 மீட்டர் (3300 அடி) உயரத்தைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

* உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil