Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் கட்டணம் உயராது: லாலு சூசகம்!

Advertiesment
ரயில் கட்டணம் உயராது: லாலு சூசகம்!
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:46 IST)
ரயில் கட்டணத்தை உயர்த்தாமல், மக்களுக்கான ரயில்வே நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் லூலு பிரசாத் யாதவ் சூசகமாக தெரிவித்தார்.

பெங்களூருவில் யஸ்வந்த்பூரில் மாதிரி ரயில் நிலையத்தை இன்று லாலு பிரசாத் யாதவ் திறந்து வைத்து சிற்ப்பரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது. ரயில்வே நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கையில் ரயில்களில் பொதுப் பெட்டிகளை அதிகரிக்கவும், பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ரயில்வே கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள இருப்பு பாதைகளை அகலப்படுத்துவது, நீட்டிப்பு செய்வது உட்பட 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய பாதைகளை சேர்த்துள்ளது. இதனால் இந்த நிதி ஆண்டில் இருந்து ரயில்வே மத்திய அரசுக்கு லாப ஈவு பங்கு செலுத்தத் துவங்கியுள்ளது.

ரயில்வே அலுமினிய சரக்கு பெட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் போக்குவரத்துக்கான செலவில் 40 விழுக்காடு குறையும். அத்துடன் அதிக சரக்கு பெட்டிகளை இணைப்பதால் ரயில்வேயின் திறனும் அதிகரிக்கும்.

ரயில்வேயின் வருவாய் இந்த நிதி ஆண்டில் (2007-08) நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. தினசரி 1 கோடியே 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தினசரி 11 ஆயிரம் ரயில்களை இயக்குகிறது. 7,500 ரயில் நிலையங்களை பராமரிக்கிறுது. ரயில்வேயில் 14 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர் என்று லாலு தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil