2008-09 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சற்று முன் தாக்கல் செய்தார்.
லாலு பிரசாத் யாதவ் படிக்கத் துவங்கிய உடன் அவர் குறிப்பிடும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் உங்களுக்கு தமிழ்.வெப்துனியா.காம் தொகுத்து வழங்கியுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில்...
நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 155 பாதைகள் விரைவில் திறக்கப்படும்.
37 புதிய ரயில் பாதைகள், 5 ரயில் பாதைகள் இரட்டிப்பு பணிகள், 7 ரயில் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சாதாரண, விரைவு, அதிவிரைவு ரயில்களில் 50 ரூபாய்க்கு மேற்பட்ட பயணச் சீட்டுகளில் 1 ரூபாய் குறைப்பு.
2011ஆம் ஆண்டிற்குள் சரக்கு கையாளும் திறன் 650 மெட்ரிக் டன்னில் இருந்து 1100 மெட்ரிக் டன்னாக உயர்த்தத் திட்டம்.
சரக்குப் பெட்டிகளை குத்தகை விடுவதற்கு புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
ரயில்வேத் துறையில் நிலக்கரி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை மொத்தமாக கையாளுவதற்கு 24 மணி நேர நிலையங்கள்.
ரயில்வே தொழில்நுட்பத் துறையை நவீன மயமாக்க ரூ.2,50,000 கோடியில் திட்டம்.
மாநிலங்களின் 50 விழுக்காடு பங்களிப்புடன் 1000 புதிய ரயில்வே மேம்பாலங்கள்.
தாய்-சேய் விரைவு ரயில் என்ற 7 பெட்டிகள் கொண்ட புதிய சிறப்பு ரயில், ராஜீவ்காந்தி அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகம் செய்யப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த மகளிருக்கு பயணக் கட்டணத்தில் 30 முதல் 50 விழுக்காடு சலுகை
மின்சாரத்தை சேமிப்பதற்காக நாடு முழுவதும் ரயில்வேயின் பயன்பாட்டில் உள்ள 6 லட்சம் குண்டு பல்ப்புகள் மாற்றப்படும்.
கேரளாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை.
ரயில்வே தனது புதிய திட்டங்களுக்கான நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து பெற முடிவு.
நாடு முழுவதும் உள்ள 2,500 பழைய சமிக்ஞை கருவிகள் புதிதாக மாற்றப்படும்.
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு தனி ரயில் பாதை அமைக்கப்படும்.
16 ரயில்கள் பயண நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
5% கட்டணம் குறைப்பு
முதல் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு பயணக் கட்டணங்களும் 5 விழுக்காடு குறைக்கப்படும்.
50 கி.மீட்டருக்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணம் 5 விழுக்காடு குறைக்கப்படுகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் சரக்குக் கட்டணம் 5 விழுக்காடு குறைப்பு
ஏசி கட்டணங்கள் குறைப்பு
முதல் வகுப்பு ஏசி கட்டணம் 7 விழுக்காடு குறைப்பு
இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் 4 விழுக்காடு குறைப்பு
மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் 2 விழுக்காடு குறைப்பு
ரயில்வே கூலிகளை இனி நான்காம் நிலை ஊழியர்கள் என்று அழைக்க வேண்டும்.
செல்பேசிகளின் வாயிலாக ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திட்டம்
ஸ்மார்ட் கார்ட் மூலம் ரயில் பயணச் சீட்டுகளை அளிக்கும் திட்டம்
சென்னை - சேலம் இடையே தினசரி விரைவு ரயில்
மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச ரயில் பயணப் பாஸ்
பயணச் சீட்டில் ரயில் வந்து சேரும் உத்தேச நேரமும் குறிக்கப்படும்.
கிழக்கு - மேற்கு மண்டலங்களை இணைக்கும் சிறப்பு சரக்கு ரயில் பாதையுடன் எண்ணூர் துறைமுகம் இணைக்கப்படும்.
நீண்ட தூர அதிவேக ரயில்களில் அடுத்து நிற்கப்போகும் ரயில் நிலையத்தின் பெயர் அறிவிப்புப் பலகையில் காட்டப்படும்.
எல்லா ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த உள்சுற்று கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.
அன்னிய நிறுவனங்களின் உதவியுடன் புதிய சரக்குப் பெட்டிகள் வடிவமைப்புச் செய்யப்படும்.
தற்பொழுதுள்ள ஆளில்லா ரயில் - சாலை சந்திப்புகள் அனைத்தும் ஆட்கள் நியமித்து நிர்வகிக்கப்படும்.
உள்ளூர் ரயில்களில் 12வது வரைப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை
இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக 53 ரயில்கள் விடுவதற்கு அனுமதி. இது தவிர 10 ஏழைகள் ரதம்.
மதுரையில் இருந்து மான்மேட் ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில்.
புதிய ரயில்கள்
ஜபல்புர் - புதுச்சேரி இடையே வாரத்திற்கு ஒரு முறை செல்லும் புதிய ரயில் அறிமுகம்.
வாரணாசி - ராமேஸ்வரம் இடையே புதிய விரைவு ரயில்
வாரணாசி - டெல்லி இடையே வாரத்திற்கு ஒரு முறை ரயில்
பூனா - நாக்பூர் வார விரைவு ரயில்
மாணவிகளுக்கும், அசோகா சக்ரா விருது பெற்றவர்களுக்கும் கட்டணச் சலுகை
5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் தகவல் தொழில்நுட்ப மயமாக்கும் முன்னோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.
உள்கட்டமைப்பு மேம்பாடு
2009 ஆம் ஆண்டிற்குள் ரயில்களில் தகவல் தொழில் நுட்ப வசதி.
2010 ஆம் ஆண்டிற்கு பிறகு எவர்சில்வர் தகடுகளால் (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்) ஆன ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இதன் உற்பத்தி 2008-09 நிதி ஆண்டில் தொடங்கும்.
பி பிரிவு ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களின் உயரம் அதிகரிப்பு
டி பிரிவு ரயில் நிலையங்களில் மேற் கூறை அமைத்தல்.
பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகரித்தல்.
30 பெரிய ரயில் நிலையங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்.
கிழக்கு - மேற்கு ரயில் மண்டலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு என தனி ரயில் பாதை அமைக்கப்படும்.
தானியங்கி சமிக்ஞை அமைப்புகள் அதிகமாக நிறுவப்பட்டு போக்குவரத்து அதிகப்படுத்தப்படும்.
பயணப் பெட்டிகளை சுத்தப்படுத்தும் ஒப்பந்தம் தனியார்களுக்கு வழங்கப்படும்.
நீண்ட தூர ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்களின் பெட்டிகளிலேயே பயணிகளின் வசதிக்காக மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்படும்.
அனைத்து ரயில்களிலும் பொது விசாரணை அமைப்பு அமைக்கப்படும்.
கழிவுகளை வெளியேற்றத் தேவையற்ற நவீன கழிவறைகள் சோதனை முயற்சியில் உள்ளன.
தானியங்கி ரயில் பயண முன்பதிவு மையங்கள் 6,000 ஆக அதிகரிக்கப்படும்.
நமது நாட்டில் உள்ள 30 ரயில் நிலையங்களில் அதிநவீன வாகன நிறுத்து வசதி செய்து தரப்படும்.
ரயில் போக்குவரத்துத் தொடர்பான அனைத்து விவரங்களும் கால் சென்டர்களின் மூலம் வழங்கப்படும். அவைகளை உள்ளூர் கட்டணத்திலேயே தொடர்பு கொண்டு அறியலாம்.
நமது நாட்டில் உள்ள 50 பெரிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக மின் தூக்கிகளும் மின் படிகட்டுகளும் அமைக்கப்படும்.
ரயில் நிலையங்களில் நடைபாதைகளை மேம்படுத்த ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு.
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் அதி நவீன பயணப் பெட்டிகள்
2025 எனும் ரயில் முன்னோக்குத் திட்டம் அடுத்த 17 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
ரயில் பயணப் பெட்டிகளில் தொலைக்காட்சி, இணைய வசதி அளிக்கப்படும்.
அனைத்து ரயில்களிலும் பொது அறிவிப்பு அமைப்பு பொருத்தப்படும்.
நீண்ட தூர ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்களின் பெட்டிகளிலேயே பயணிகளின் வசதிக்காக மின்னணு தகவல்கள் பலகைகள் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமைக் கழிவறைகள் ரூபாய் 4,000 கோடி செலவில் 36,000 பயணப் பெட்டிகளில் உருவாக்கப்படும்.
ஜன் சதாரன் பயணச் சீட்டு முன்பதிவு நிலையங்கள் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
A. B பிரிவு ரயில் நிலையங்களிலும் ரயில் போக்குவரத்துத் தொடர்பான முன்னரிவிப்பு எலக்ட்ரானிக் பலகைகளில் தெரிவிக்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் எல்லா ரயில் பயணப் பெட்டிகளிலும் சுற்றுச் சூழலை பாதிக்காத பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும்.
ரயில்வே திட்ட செலவு ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.
சரக்கு கையாள்வது 10 விழுக்காடாக அதிகரிப்பு.
சரக்கு போக்குவரத்து வருவாய் இலக்கு ரூ.4,40,000 கோடி.
ரயில் போக்குவரத்து சேவை இல்லாத மற்ற வகை வருவாய் இலக்கு ரூ.20,000 கோடி.
இரண்டு ஆண்டுகளில் பயணச் சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றிலுமாக நீக்கப்படும்.
இந்த நிதியாண்டில் ரயில் போக்குவரத்துத் தொடர்பான விசாரணைகள் கால் சென்டர்கள் மூலம் பதிலளிக்கப்பட்டது.
கோ மும்பை கார்ட் என்ற பெயரில் மும்பை ரயில்களில் பயணம் செய்வதற்கான பல்நோக்கு பயணச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
எல்லா ரயில்களிலும் அதி நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
இணையத்தின் வாயிலாக பயணச் சீட்டுக்களை பதிவு செய்யும் வசதி விரிவுப்படுத்தப்படும்.
ரயில்வே வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 5 விழுக்காடு ஒதுக்கீடு.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி மூலதனம் உருவாக்க சிறப்புத் திட்டம்
2008-09 நிதியாண்டில் மேலும் 20 ஆயிரம் புதிய சரக்குப் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள 5 ஆயிரம் வேகன்கள் மேம்படுத்தப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அதி நவீன ஆயுதங்களும், கருவிகளும் வழங்கப்படும்.
ரயில் விபத்துக்களைத் தவிர்க்க சிறப்பு அமைப்புகள் எல்லா ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* ரயில்வே லாபம் ரூ. 25,000 கோடி
* ரூ.49,250 கோடியில் புதிய ரயில் திட்டங்கள்
* ரயில்வே இயக்கம் 76% இருந்தது.
நான்கு நிதியாண்டுகளில் ஒட்டுமொத்தமாக 68,778 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் மேலும் 3000 பெட்டிகளை இயக்கியதன் மூலம் கூடுதலாக ரூபாய் 2000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 2007 வரை அதற்கு முந்தைய ஆண்டை விட சரக்கு கையாடல் 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் ரயில் சேவை அதிகரிப்பு
ரயில்வேயின் மொத்த முதலீட்டில் வருவாய் விழுக்காடு அதிகரிப்பு.
சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ.14,000 கோடி லாபம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளால் ரயில்வே லாப உயர்வு
ரயில்வேயின் சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
சரக்குப் போக்குவரத்து சேவையில் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய்.
2007-2008ல் இதுவரை இல்லாத லாப உயர்வு
790 மில்லியன் சரக்குப் போக்குவரத்து சாதனை
தனியார் துறையும் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றும் திட்டம் துவக்கம்.