Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌நகை‌ச்சுவை ஜோடிக‌ள் வா‌ழ்‌‌வி‌ல் இணை‌கிறா‌ர்க‌ள்

Advertiesment
நகைச்சுவை ஜோடிகள் வாழ்வில் இணைகிறார்கள்
, செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (10:58 IST)
‌‌சி‌னிமா ம‌ற்று‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் நகைச்சுவை பா‌த்‌திர‌ம் ஏ‌ற்று நடி‌க்கு‌ம் நடிகை ஆர்த்தியும் நடிகர் மாஸ்டர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் திருமணம் அக்டோபர் 23-ந் தேதி குருவாயூ‌ர் கோவிலில் நடக்கிறது.

ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் ப‌ல்வேறு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் மாஸ்டர் கணேசுக்கும் காதல் ஏ‌ற்ப‌ட்டு அது ‌திரு‌மண‌த்‌தி‌ல் முடி‌கிறது.

இவ‌ர்களது காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட இருவரது பெ‌ற்றோ‌ர்க‌ள் கல‌ந்து பே‌சி அக்டோபர் 23-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் ‌திருமண‌த்தை நட‌த்த முடிவெடு‌த்து‌ள்ளன‌ர். மணமக்க‌ள் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. மணமகள் ஆர்த்தி நடித்து கொண்டே ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். இதுவரை 3 முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கிறார்.

த‌ங்களது காத‌ல் ‌திருமண‌ம் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆ‌ர்‌த்‌தி, நானு‌ம் கணேசு‌‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் இணை‌ந்து ப‌ணியா‌ற்று‌கிறோ‌ம். எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம், தங்கவேலு-சரோஜா ஜோடிகளை போல் நானும் கணேசும் சிறந்த நகைச்சுவை ஜோடியாக திரையுலகில் வாழ்ந்து காட்டுவோம் எ‌ன்று நடிகை ஆர்த்தி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil