விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சி நேர மாற்றத்துடன் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
போட்டி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நடன போட்டி நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனை துவங்கியது.
நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகைகள் ராதிகா மற்றும் கவுதமி இருவரும் மிகவும் கலகலப்பாகவும், அதே சமயம் போட்டியாளர்களுக்கு சவாலாகவும் இருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் வரும் வாரம் ஃபோக் சுற்று ஒளிபரப்பாக உள்ளது.
இதுவரை வெள்ளி மற்றும் சனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி, இப்போது முன்னதாக இரவு 9 மணிக்கே ஒளிபரப்பை தொடங்குகிறது. இது ரசிகர்களுக்கு மேலும் வசதியாக அமைந்து விடும் என்பது உண்மையே.