பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவி, தற்போது சிறுவர்களுக்கான கலக்கப் போவது யாரு ஜூனியர் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறார்கள் வாண்டுகள்.
கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள சிறுவர்கள் பங்கு பெற்றனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
நடிகர் பாண்டியராஜன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்க உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.