ஜூன் 13ஆம் தேதி விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டிரெய்லர் ரிலீஸ்

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (14:46 IST)
விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டிரெய்லர் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தை இயக்கிய  கோகுல், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோயினாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன்  நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.
 
பாரிஸில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க, பாரிஸிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக சயீஷா நடித்துள்ளார். எனவே, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கேயே எடுக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில், இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.  எனவே, விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, ஜூன் 13ஆம் நடைபெறும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments