Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

Advertiesment
சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு
, ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (15:20 IST)

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 

லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு  இந்த விருதை அறிவித்துள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்தார். சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ ஊழல் தான் இந்த படத்தின் மைய கதை.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  இதில் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த  விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில், கொண்டாடி வருகிறார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி