Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுடன் பேசியது என்ன? தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (18:22 IST)
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்து 3வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாலை சென்னைக்கு வந்த தெலுங்கானா முதல்வர், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
2004ஆம் ஆண்டு நான் ஏற்கனவே தமிழகம் வந்துள்ளேன். அப்போது நான் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது அரசியல் நிலவரம் குறித்து எனக்கு அவர் கற்பித்தார். தென் மாநிலங்களின் குரலாக ஒலிக்கும் கருணாநிதியை நினைத்து பெருமை அடைகிறேன்.
அதேபோல் இன்று கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்ததை அரசியலாக்க வேண்டாம். தென் மாநிலங்களுக்கான உரிமையை பெறுவோம் அதில் பின்வாங்க போவதில்லை. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்பட வில்லை.
 
எனது சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். மத்திய, மாநில அரசு உறவுகள், மாநில சுயாட்சி குறித்து ஸ்டாலினிடம் விவாதித்தேன். 3-வது அணியா, 4-வது அணியா என்பது கேள்வி அல்ல, ஒரு அணியாக மட்டுமே உருவெடுப்போம். அதே நேரத்தில் புதிய அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை' என்று சந்திரசேகரராவ் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments