Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட்லியை இழித்து பேசுவதா? சித்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (16:16 IST)
தென்னிந்திய மக்களையும் இட்லி உள்பட தென்னிந்திய உணவையும் இழிவாக பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத்சித்து மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சைக்குள்ளான சித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இட்லி உள்பட தென்னிந்திய மொழிகள் தனக்கு ஒப்புக்கொள்ளாது என்றும், தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் தனக்கு புரியவில்லையென்றும் ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் மக்கள் பேசும் ஆங்கிலம்  மற்றும் பஞ்சாபி தனக்கு நன்கு புரிவதால் அவர்களுடன் பேசுவது எளிமையாக இருப்பதாகவும் சித்து கூறினார்.

சித்துவின் இந்த பேச்சு தென்னிந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களையே அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில், 'தமிழகத்தை குறிப்பிட்டு தமிழ்மொழியையும் நம்ம ஊர் இட்லியையும் இழித்துபழித்து பேசிய காங். அமைச்சர் சித்து அவர்களை கண்டிக்கிறேன். இதைக் கண்டிக்க. திராணியும் தெம்பும் இல்லாத நம்ம உள்ளூர் தமிழ்க் காவலர்கள், தமிழ் போராளிகள் எங்கே? எங்கே? என தேடுகிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments