ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (18:23 IST)
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பான்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்தது.
 
இது தொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. 
 
இந்நிலையில்,பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments