Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டுவிட்டரில் சத்யராஜை மறைமுகமாக கலாய்த்த ஹெச்.ராஜா

Advertiesment
டுவிட்டரில் சத்யராஜை மறைமுகமாக கலாய்த்த ஹெச்.ராஜா
, புதன், 11 ஏப்ரல் 2018 (15:51 IST)
நடிகர் சதய்ராஜை, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி போராட்டம் நடத்தது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 
 
அந்த நிகழச்சியில் கலந்துகொண்ட பேசிய சத்யராஜ் நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் ஒளிந்துகொள்ளுங்கள் என ஆவேசமாக பேசினார்.
webdunia


இதற்கு மறைமுகமாக சத்யராஜை கிண்டல் செய்யும் வகையில், ஹெச்.ராஜா டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். அதில் இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று கூறி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர், தங்களது கைகளை கூப்பிட்டு போலீசாரிடம் மன்னித்து விடுங்கள என கேட்பது போல உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முல்லை தீவு மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு!