Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி சம்பவத்திற்கு பின்பும் பாடம் கற்காத போலீசார் - அதிர்ச்சி வீடியோ

Advertiesment
திருச்சி சம்பவத்திற்கு பின்பும் பாடம் கற்காத போலீசார் - அதிர்ச்சி வீடியோ
, செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:00 IST)
சென்னையில் ஹெல்மெட் போடாமல் சென்ற வாலிபரை மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கியோடு சென்றுள்ளார். 3 பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும், ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர். அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
 
இதனால் கோபமடந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார். இதில் அவர் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது.  இதனால் ஆத்திரம அடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், திருச்சி சம்பவத்திற்கும் பின்பும் போலீசார் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், அவர்கள் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலிபர் மீதுதான் தவறு - முட்டுக் கொடுக்கும் காவல்துறை