ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி பொதுமக்கள் மனு!

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (08:49 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தூண்டுதலால் தூத்துகுடி மக்கள் போராட்டம் செய்தனர். இதன் விளைவாக பொதுமக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதால் தான் வன்முறை ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் என்ற கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்கள் கிராமத்திற்கு கிடைத்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏராளமானோர் வேலையிழந்துள்ளதாகவும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல், லாரி உரிமையாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியவில்லை. லாரிகள் மற்றும் சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களும் வேலையிழந்துள்ளதால் அவர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக்கடனை கட்ட முடியவில்லை என்று கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments