Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பேரிடர் பயிற்சியின்போது கல்லூரி மாணவி பலி: பயிற்சியாளர் கைது.

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (08:03 IST)
கோவையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்று கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் இரண்டாவது மாடியில் இருந்து குதிப்பது எப்படி என்ற பயிற்சியை லோகண்யா என்ற 19 வயது கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்தார். கீழே மாணவர்கள் வலையுடன் தயார் நிலையில் இருந்தபோது பயிற்சியாளர் மாணவியை கீழே தள்ளிவிட்டார். ஆனால் எதிர்பாராத வகையில் முதல்மாடியின் சன்ஷேடில் விழுந்த லோகண்யா தலையில் பலமான காயமேற்பட்டு மரணம் அடைந்தார்.
 
மாணவியின் பாதுகாப்பை கருதி கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் செய்யப்பட்டது. இதன் காரணமாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
மாணவி கீழே விழுந்தபோது இந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இதோ

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments