தாமரை 'கை'யில் கசங்கும்: காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (19:44 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் புதிய தெம்புடன் உள்ளனர். ராகுல்காந்தியின் தலைமையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டதாகவே அவர்கள் கருதி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் 'வடக்கே தாமரை கருகும் வாசனை தெற்கு வரைக்கும் அடிக்கிறது. இன்னும் ஓராண்டில் மத்தியில், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானாவில் தாமரை 'கை'யில் கசங்கி கிடக்கப் போகிறது. இதில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துட்டாலும்..என்று பதிவு செய்துள்ளார்.

ஜோதிமணியின் இந்த பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் காமராஜருக்கு பின் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாமல், திமுகவின் முதுகில் சவாரி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்றும், தமிழகத்தில் 'தாமரை' எப்படி மலராதோ அதேபோல் 'கை'யும் நிமிராது என்று பலர் பதிலடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments